ஸ்ரீ நவரத்தின மாலை

0 comments
lalitha-sahasranamam

ஸ்ரீ நவரத்தின மாலை

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

ஞான புரீசா சரணம் சரணம்
ஞானா ம்பிகையே சரணம் சரணம்
ஞான சத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
கார்க்கும் கணநாயக வாரணமே

வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நீலம்

மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முத்து

முத்தே வரும் முத் தொழிலாற்றிடவே
முன் நின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செயும் ஆனந்த மேடை
சிந்தை நிரம் பவளம் பொழிபாரொ
தேம்பொழி லாமிது செய்தவளாரோ
எந்த யிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமி குத்தாள்
மந்திர வேத மயப்பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாணிக்கம்

காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையா பொலிவானவளே
புதுமைக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதி ஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கோமேதகம்

பூமே விய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல் வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பதுமராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவி காஸவியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரிணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மங்கள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

வைடூரியம்

வலை யொத்தவினை கலையொத்தமனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளா கவரம் தருவாய்
அலைவற்றசை வற்றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பயன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எலாம் அடைவார்
சிவ ரத்தினமாய்த் திகழ்வாரவரே

திருச்சிற்றம்பலம்

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

  • கந்தர் அலங்காரம்

    0 378

    அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

    View more
  • Thirunallar

    1 689

    The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

    View more
  • Vallalar Temple,

    0 456

    Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

    View more
  • Cheraman Juma

    0 379

    Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

    View more
  • சங்கராய சங்கராய

    0 377

    சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

    View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN