மனுநீதிச் சோழன்

0 comments
Lord-Shiva

மனுநீதிச் சோழன் நீதி தவறாத மன்னன். சிவ பக்தன். அவனுடைய மகனாகிய வீதி விடங்கன் தேரோட்டும் பொழுது ஒரு பசுவின் கன்று தேரின் சக்கரங்களில் அடிபட்டு இறந்தது. நீதி தவறாத மன்னன் தன் மகன் மீதும் தேரை ஒட்டி கொல்ல உத்தரவிட்டான். சிவபெருமானின் அருளால் கன்றும் வீதி விடங்கனும் உயிர் பெற்று எழுந்தனர் என்பது வரலாறு. மகனை இழந்த அரசன் துக்கம் தாங்காமல் மகனை இவ்வாறு இழப்பதற்கு என்னவெல்லாம் பாவங்கள் செய்திருப்பேன் என்று அந்த பாவங்களைப் பட்டியல் இடுகிறான்.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ
குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ
தருமம் மாராது தண்டஞ் செய்தேனோ
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ
உயிர்க்கொலை செய்தோர்க்கு உபகாரஞ் செய்தேனோ
களவு செய்தோர்க்கு உளவு சொன்னேனோ
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
வரவு போக்கொழிய வழியடைத்தேனோ
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ
கலங்கி யொளித்தொரைக் காட்டிக் கொடுத்தேனோ
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ
குருவை வணங்கக் கூசி நின்றேனோ
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ
வெய்யிலுக்கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ
பகைக் கொண்டு அயலோர் பயிரழித்தேனோ
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ
சிவனடியாரைச் சீறி வைதேனோ
தவஞ் செய்தொரைத் தாழ்வு சொன்னேனோ
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ
தெய்வ மகிழ்ந்து செருக்கடைந்தேனோ
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்று அறியேனே

இந்தப் பாடல் வள்ளலார் பாடியது

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 378

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 689

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 456

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 379

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 377

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN