நமச்சிவாய

0 comments
Om-Namah-Shivay

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

திருநாவுக்கரசர்

பொருள்: –  இறைவனது வளைந்த புருவத்தையும், கொவ்வைக் கனி போல் சிவந்த வாயில் அரும்பும் புன்சிரிப்பையும், குளிர்ந்த சடாமுடியையும், பவளம் போன்ற திருமேனியில் பூசியுள்ள பால் போன்ற திருநீறையும், இனிமையான தூக்கிய நிலையில் உள்ள பொற்பாதங்களையும் காண முடிந்தால் இந்த உலகில் மனிதப் பிறவியும் வேண்டுவதாகும்.

page break

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

திருஞானசம்பந்தர்

பொருள்: காதலாகி மனம் கசிந்துருகி கண்ணீர் மல்க தன் புகழை ஓதும் அடியார்களை நல்வழியில் செலுத்துவது நான்கு வேதத்திலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளாகிய இறைவனின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதுவே ஆகும்.

page break

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் siva
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

திருஞானசம்பந்தர்

பொருள்:  அந்தணர்களும், தேவர்களும் பசுக்களும் வாழ்க
குளிர்ந்த மழை பொழியட்டும் அரசனும் வாழ்க
தீமை கெடுக சிவன் நாமமே எல்லாவிடத்தும் கூறப்படவேண்டும்
இந்த உலகின் துன்பங்களைத் தீர்ப்பதற்காக.

page break

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
     அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
     புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையேயாய சிவபதம் அளித்த
     செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந்து அருளுவது இனியே

திருவாசகம் – மாணிக்கவாசகர்

பொருள்

அம்மையே அப்பனே ஒப்பில்லாத மணியே
அன்பினில் தோன்றிய அரிய அமுதே
பொய்களைச் சொல்லி பொழுதைக் கழிக்கும்
புழுத்த தலையை உடைய இழிந்தவனான எனக்கு
சிறந்த சிவபதவியை அளித்த சிவபெருமானே
இந்தப் பிறவியில் உன்னை நன்றாகப் பிடித்துக் கொண்டேன்
இனி நீ எங்கே எழுந்து சென்று அருளுவாய்?

page break

உற்றாரையான் வேண்டேன்
     ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
     கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர் ந்துறை யும்
     கூத்தா உன்குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக்
     கசிந்து உருக வேண்டுவனே

                                                       மாணிக்க  வாசகர்

page break

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
     பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
     உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
     கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
     நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாய சங்கீர்த்தன லஹரி

.page break
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே

பட்டினத்தடிகள்

பொருள்

கல்வி கற்காத பிழையையும், அதைக் கருதி உணராத பிழையையும், உன்னை எண்ணி மனம் கசிந்து உருகி நில்லாத பிழையையும், உன்னை நினைக்காத பிழையையும், சிவாயநம என்ற ஐந்தெழுத்தைச் சொல்லாத பிழையையும், உன்னைத் துதிக்காத பிழையையும், உன்னைத் தொழாத பிழையையும், மற்ற எல்லாப் பிழைகளையும் பொறுத்தருள்வாய் காஞ்சிபுரம் அமரும் ஏகாம்பர நாதனே.

page break

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயன் திருநீறே

திருஞானசம்பந்தர்

பொருள்

மந்திரங்களில் உள்ளது திருநீறு.
தேவர்களின் மேல் பூசிக்கொள்வதும் திருநீறு.
திருநீறு அழகானது
வணங்கி துதிக்கப்படுவதும் திருநீறு
பலவகை நூல்களாவதும் திருநீறு
எல்லா சமயங்களில் உள்ளதும் திருநீறு
அந்தத் திருநீர் எதுவென்றால் செம்பவள வாயுடைய உமைக்கு தன்  சரிபாதியைத் தந்த திரு ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருநீறாகும்.

page break

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

திருநாவுக்கரசர்

பொருள்

ஞானமும் ஞானத்தைத் தரும் கல்வியும் நமச்சிவாய என்னும் மந்திரமாகும்.நானறியும் வித்தைகளும் நமச்சிவாய என்னும் மந்திரமே.எல்லோர்க்கும் நல்வழி காட்டுவதும் நமச்சிவாய என்னும் மந்திரமே.

page break

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

திருமந்திரம் – திருமூலர்

பொருள்

தீவினையாளர் சிவசிவ என்று சொல்ல மாட்டார்கள். சிவசிவ என்று சொல்லத் தீவினை தீரும். சிவசிவ என்று சொல்ல தேவராகவும் ஆவர். சிவசிவ என்றிட சிவகதி விளையும்.

page break

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்

பெரிய புராணம் – சேக்கிழார்

பொருள்

இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உணர்ந்து இவன் தான் இறைவன் என்று வாழ்த்தப் படுகின்றவனும், நிலவு உலாவுகின்ற கங்கை நதியைச் தன் சடாமுடியில் அணிந்தவனும், அளவற்ற ஒளிமயமானவனும், தில்லை அம்பலத்தில் நடனம் செய்கின்றவனுமான சிவபெருமானின் அடியார்களின் மனதில் மலரும் சிலம்பணிந்த சிவபெருமானின் திருவடிகளை வாழ்த்தி வணங்குவோம்.

page break

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 378

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 689

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 456

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 379

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 377

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN