திருவருட்பா

0 comments
Tiruvarutpa

அல்லலென்பதேன்றெல்லை நெஞ்சமே
மல்ல லொற்றியூர் எல்லை சென்றுமே
சென்று வாழ்த்தி நன்று நெஞ்சமே
யென்று நல்வள மொன்று மொற்றியே
ஒதவடங்காது மடங்காது தொடங்காது
ஓகையொடுங்காது மடங்காது நடுங்காது
சூதமலங்காது விலங்காது கலங்காது
ஜோதி பரஞ்சோதி சுயஞ்சோதி பெருஞ்சோதி
ஏதமுயங்காது கலங்காது மயங்காது
ஏறியிறங்காது உறங்காது கறங்காது
சூதமிணங்காது பிணங்காது வணங்காது
ஜோதி பரஞ்ஜோதி சுயஞ்சோதி பெருஞ்சோதி

இரண்டாம் திருமுறை முத்தி உபாயம்

திருவொற்றியூர்
வஞ்சித்துறை
திருச்சிற்றம்பலம்

ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே
நிற்றி நீஅருள் பெற்றி சேரவே

சேர நெஞ்சமே தூரம் அன்றுகாண்
வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே

முத்தி வேண்டுமேல் பத்தி வேண்டுமால்
சத்தி யம்இது புத்தி நெஞ்சமே

நெஞ்ச மேஇது வஞ்ச மேஅல
பிஞ்ச கன்பதம் தஞ்சம் என்பதே

என்ப தேற்றவன் அன்ப தேற்றுநீ
வன்பு மாற்றுதி இன்பம் ஊற்றவே

ஊற்றம் உற்றுவெண் நீற்றன் ஒற்றியூர்
போற்ற நீங்குமால் ஆற்ற நோய்களே

நோய்கள் கொண்டிடும் பேய்கள் பற்பலர்
தூய்தன் ஒற்றியூர்க் கேய்தல் இல்லையே

இல்லை இல்லைகாண் ஒல்லை ஒற்றியூர்
எல்லை சேரவே அல்லல் என்பதே

அல்லல் என்பதேன் தொல்லை நெஞ்சமே
மல்லல் ஒற்றியூர் எல்லை சென்றுமே

சென்று வாழ்த்துதி நன்று நெஞ்சமே
என்றும் நல்வளம் ஒன்றும் ஒற்றியே
தனிப் பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே
பெருந்தயவுடையவரே
பனிபெறுந்தனையாண்ட பரம்பரே
எம்பார்வதி புர நானாபதி சிதம்பரரே
இனிச்சிறு பொழுதேனும் தாழ்த்திடல் வேண்டாம்
இறையவரே உமை இங்கு கண்டல்லால்
அனித்திய உலகினை பார்க்கவு மாட்டேன்
அருட்பெருஞ்சோதி யிராணை யிதும் மீதே

அருட்சோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட் சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
வேதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறெனக் கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற் சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

எல்லாம் செய்வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனெக்கெ இன்பம் நல்கும் தெய்வம்
நற் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்
காரணமாம் தெய்வமருட் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகளெல்லாம் செல்லுகின்ற தெய்வம்
சிற் சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகரில்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிடை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனியாக கலந்தினிக்கும் தெய்வம்
கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற் சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்

ஆறாம் திருமுறை – திருக்கதவந் திறத்தல்

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே

ஆறாம் திருமுறை – வரம்பில் வியப்பு

பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
புகலரும் பெரியஓர் நிலையில்
இன்புரு வாகி அருளொடும் விளங்கி
இயற்றலே ஆதிஐந் தொழிலும்
தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
அவன்தனை மறுப்பவர் யாரே

அப்பன் வரு தருணமிதே ஐயமிலை கண்டாய்
அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசைஉள்ளாய்
கெய் பறவே சத்தியமென்றுரைத்திரு
நின்னுரைக்கோர் எள்ளளவும் பழுது வராது என்னிறைவராணை
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
எவ்வுயிரு மெவ்வெ வரு மேத்தி மகிழ்ந்திடவே
செப்பமுறு திருவருட் பேரொளி வடிவாய் களித்தே
செத்தாரை எழுப்புதல் நான் திண்ண முணர் மனனே

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 378

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 689

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 456

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 379

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 377

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN