ஞானப்பான

0 comments
Njanappana

பூந்தானம் பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் பெரிந்தல்மன்னா என்னும் இடத்தின் அருகிலுள்ள கீழத்தூர் எனும் கிராமத்தில் பிறந்தவர். நம்பூதிரி குலத்தைச் சேர்ந்த அவர் குருவாயூரப்பனின் பரம பக்தர். பூந்தானம் என்பது அவரது குடும்பப் பெயர். அவரது இயற்பெயர் தெரியவில்லை. அவருக்கு இளம் வயதில் திருமணமாகி பின்னர் நீண்ட காலம் கழிந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகச் சிறிய வயதில் அந்தக் குழந்தையை இழக்க வேண்டி வந்த நிலையில் குருவாயூரப்பனைச் சரண் அடைந்து பாடிய பாடலே ஞானப்பான. ‘உண்ணிக் கிருஷ்ணன் மனதில் நிறைந்து உள்ள போது வேறு குழந்தைகளும் வேண்டுமோ’ என்ற வரிகள் இந்தப் பாடலை இயற்றும் போது அவருக்கு இருந்த மன நிலையைக் குறிக்கிறது. மிக எளிமையான மலையாளத்தில், சமஸ்க்ருதம் கலக்காமல் பாடிய இந்தப் பாடல்களுக்கு ‘அறிவுக் களஞ்சியம்’ என்று பொருள். ’பான’ என்றால் குடம் அல்ல, அது  மலையாளத்தில் ஒரு வகை நாடோடிப் பாடல் நடை .

பூந்தானமும் நாராயணீயத்தை இயற்றிய மேப்பத்தூர் நாராயண பட்டாதிரியும் சம காலத்தவர்கள். தன்னுடைய ஞானப்பானயை மேப்பத்தூரிடம் கொடுத்து அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்ட போது அது சமஸ்க்ருதத்தில் இயற்றப்படாமல் மலையாளத்தில் இருந்ததால் அதனை மேப்பத்தூர் நிராகரித்து விட்டார். அன்று இரவு குருவாயூரப்பன் மேப்பத்தூரின் கனவில் வந்து உன்னுடைய விபக்தியை (இலக்கணம்) விட பூந்தானத்தின் பக்தியே எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறினார். தன்னுடைய தவறை உணர்ந்த மேப்பத்தூர் பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார் என்பது ஒரு சுவையான ஒரு சம்பவம்.

அவருடைய இறுதி காலத்தில் குருவாயூரப்பன் அவர் முன் தோன்றி ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரையும் அவருடன் வரத் தயாராக இருக்கும் எல்லோரையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். பூந்தானம் தன்னுடன் இருந்த எல்லோரிடமும் அதைக் கூறி அவர்களையும் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் யாரும் அதை நம்பவில்லை. குருவாயூரப்பன் அவரை அழைத்துச் செல்லத் தேரில் வந்தபோது உடன் யாரும் வரத் தயாராக இல்லாததால் அவரை மட்டும் அழைத்துச் சென்றாராம்.

இந்தப் பாடல்களை மலையாளத்து பகவத் கீதை என்று போற்றுவர். 360 வரிகளில் பாடப்பட்ட இந்தக் கவிதை மிக எளிமையாகக் கூறப்பட்டாலும் பல உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கியது.

வந்தனம்

குருநாதன் துண செய்க சந்ததம்
திருநாமங்ஙள் நாவின் மேலெப்பொழும்
பிரியாதே யிரிக்கேணம் நம்முடே
நரஜன்மம் சபலமாக்கீடுவான்

கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவ
சச்சிதானந்த நாராயணா ஹரே

காலலீல

இன்னலயோள மெந்தெந்நறிஞீலா
இன்னி நாளையுமெந்தெந்நறிஞீலா
இன்னிக் கண்ட தடிக்கு விநாசவும்
இன்ன நேரமென்னேது மறிஞ்ஞீலா

கண்டு கண்டங்ஙிரிக்கும் ஜனங்ஙளெ
கண்டில்லென்னு வருத்துன்னதும் பவான்
ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனெ
தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்

மாளிக முகளேறிய மன்னன்றெ
தோளில் மாறாப்பு கேற்றுன்னதும் பவான்

அதிகாரபேதம்

கண்டாலொட்டறியுன்னு சிலரிது
கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே
கண்டதொன்னுமே சத்யமல்லென்னது
முன்பே கண்டிட்டறி யுன்னிது சிலர்

மனு ஜாதியில் தன்னெ பலவிதம்
மனஸ்ஸின்னு விசேஷ முண்டோர்க்கணும்
பலர்க்கும் அறியேண மென்னிட்டல்லோ
பல ஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்
கர்மத்திலதிகாரி ஜனங்ஙள்க்கு
கர்ம சாஸ்திரங்ஙளுண்டு பலவிதம்
சாங்க்ய சாஸ்திரங்ஙள் யோகங்களன்னிவ
சங்கியில்லது நில்கட்டெ சர்வவும்

தத்வ விசாரம்

சுழந்நீடுன்ன சம்சார சக்ரத்தில்
உழந்நீடும் நமுக்கறிஞீடுவான்
அறிவுள்ள மஹத்துக்களுண்டொரு
பரமார்த்தமருள் செய்திரிக்குன்னு
எளுதாயிட்டு முக்தி லபிப்பானாய்
செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்

நம்மயொக்கெயும் பந்திச்ச ஸாதனம்
கர்மமென்னறி யேண்டது மும்பினால்
முன்னமிக்கண்ட விஸ்வமசேஷவும்
ஒன்னாயுள்ளோரு ஜ்யோதிஸ்வரூபமாய்
ஒன்னும் சென்னங்ஙு தன்னோடு பற்றாதே
ஒன்னினும் சென்னு தானும் வலயாதெ
ஒன்னோன்னாயி நினக்கும் ஜனங்ஙள்க்கு
ஒன்னு கொண்டறி வாகுன்ன வஸ்துவாய்
ஒன்னிலும் அறியாத்த ஜனங்கள்க்கு
ஒன்னு கொண்டும் திரியாத்த வஸ்துவாய்
ஒன்னு போலே ஒன்னில்லாதெ யுள்ளதின்
ஒன்னொன்னாயுள்ளோரு ஜீவ ஸ்வரூபமாய்
ஒன்னிலுமொரு பந்தமில்லாதெயாய்
நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்

மூன்னும் ஒன்னிலடங்ஙுன்னு பின்னெயும்
ஒன்னுமில்லபோல் விஸ்வமன்னேரத்து

கர்மம்

ஒன்னு கொண்டு சமச்சொரு விஸ்வத்தில்
மூன்னாயிட்டுள்ள கர்மங்ஙளொக்கயும்
புண்ய கர்மங்ஙள் பாப கர்மங்ஙளும்
புண்ய பாவங்ஙள் மிஸ்ரமாம் கர்மவும்
மூன்னு ஜாதி நிரூபிச்சு காணும்போள்
மூன்னு கொண்டும் தளைக்குன்னு ஜீவனெ
பொன்னின் சங்ஙல ஒன்னிப் பறஞ்ஞதில்
ஒன்னிரும்பு கொண்டென்னத்ரே பேதங்ஙள்
ரெண்டி நாலுமெடுத்து பணி செய்த
சங்ஙலயல்லோ மிஸ்ரமாம் கர்மவும்
ப்ரம்மாவாதியாய் ஈச்ச எறும்போளம்
கர்ம பத்தன் மாரென்னதறிஞ்ஞாலும்

புவனங்ஙளெ ஸ்ருஷ்டிக்க என்னது
புவனாந்த்யப் பிரளயம் கழிவோளம்
கர்ம்ம பாசத்தெ லங்கிக்க யென்னது
ப்ரம்மாவின்னும் எளுதல்ல நிர்ணயம்

திக்பாலன்மாரு அவ்வண்ணம் ஒரோரோ
திக்குதோறும் தளச்சு கிடக்குன்னு
அல்ப்ப கர்மிகளாகிய நாமெல்லாம்
அல்ப்ப காலம் கொண்டோரோரோ ஜந்துக்கள்
கர்ப பாத்திரத்தில் புக்கும் புறப்பட்டும்
கர்மம் கொண்டு களிக்குன்னதிங்ஙனெ

ஜீவகதி

நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய்
துரிதங்ஙள் ஒடுங்ஙி மனஸ்ஸின்றே
பரிபாகவும் வன்னு க்ரமத்தாலெ
நரஜாதியில் வன்னு பிறந்நிட்டு
சுக்ருதம் செய்து மேல்போட்டு போயவர்
ஸ்வர்கத்திங்கில் இருன்னு ஸுகிக்குன்னு
சுக்ருதங்களும் ஒக்கே ஒடுங்ஙும் போள்
பரிபாகமும் எள்ளோளம் இல்லவர்
பரிசோடங்ஙிருன்னிட்டு பூமியில்
ஜாதராய் துரிதம் செய்து சத்தவர்
வன்னொரத் துரிதத்தின் பலமாயி
பின்னெ போய் நரகங்ஙளில் வீழுன்னு

ஸுரலோகத்தில் நின்னொரு ஜீவன் போய்
நர லோகே மஹீஸுரனாகுன்னு
சண்ட கர்மங்ஙள் செய்தவன் சாகும்போள்
சண்டால குலத்திங்கல் பிறக்குன்னு
அஸுரன்மார் ஸுரன்மாராயீடுன்னு
அமரன்மார் மரங்ஙளாயீடுன்னு
அஜம் சத்து கஜமாய் பிறக்குன்னு
கஜம் சத்தங்ஙஜவுமாயீடுன்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு
நாரி சத்துடன் ஓரியாய் போகுன்னு
க்ரிப கூடாதே பீடிப்பிச்சீடுன்ன
ந்ரூபன் சத்து க்ருமீயாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சயாயீடுன்னு
ஈஸ்வரன்றே விலாசங்ஙள் இங்ஙனெ

கீழ் மேலிங்ஙனெ மண்டுன்ன ஜீவன்மார்
பூமியினத்ரே நேடுன்னு கர்மங்ஙள்
ஸீமயில்லாதோளம் பல கர்மங்ஙள்
பூமியின்னத்ரே நேடுன்னு ஜீவன்மார்

அங்ஙனே செய்து நேடி மரிச்சுடன்
அன்ய லோகங்ஙள் ஒரோன்னில் ஒரோன்னில்
சென்னிருன்னு பூஜிக்குந்னு ஜீவன்மார்
தங்ஙள் செய்தோரு கர்மங்ஙள் தன்பலம்
ஒடுங்ஙீடும் அதொட்டுநாள் செல்லும்போள்
உடனெ வந்நு நேடுன்னு பின்னெயும்
தன்றே தன்றே க்ருஹத்திங்கல் நின்னுடன்`
கொண்டு போன்ன தனம் கொண்டு நாமெல்லாம்
மற்றெங்ஙானும் ஒரேடத்திரின்னிட்டு
விற்றூ என்னு பறையும் கணக்கினெ

பாரத மஹிம

கர்மங்ஙள்க்கு விளபூமியாகிய
ஜன்மதேசமிப் பூமி அறிஞ்ஞாலும்
கர்ம நாசம் வருத்தேண மெங்கிலும்
செம்மே மற்றெங்ஙும் ஸாதியா நிர்ணயம்
பக்தன்மார்க்கும் முமுக்ஷு ஜனங்ஙள்க்கும்
சக்தராய விஷயீ ஜனங்ஙள்க்கும்
இச்சிச்சீடுன்ன தொக்கெ கொடுத்திடும்
விஸ்வமாதாவு பூமி சிவ சிவ
விஸ்வநாதன்றே மூலப் ப்ரக்ருதி தான்
பிரத்யக்ஷேண விளங்ஙுன்னு பூமியாய்
அவனீதல பாலனத்தின்னல்லோ
அவதாரங்ஙளும் பலதோர்க்கும்போள்
அது கொண்டும் விசேஷிச்சும் பூலோகம்
பதினாலிலும் உத்தமம் என்னல்லோ
வேதவாதிகளாய முனிகளும்
வேதவும் பஹுமானிச்சு சொல்லுன்னு
லவணாம் புதி மத்யே விளங்ஙுன்ன
ஜம்பு த்வீபொரு யோஜன லக்ஷவும்
சப்த த்வீபுகள் உண்டதில் எத்ரயும்
உத்தமமென்னு வாழ்த்துன்னு பின்னெயும்

பூபத்மத்தினு கர்ண்ணிக யாயிட்டு
பூதரேந்திரன் அதிலல்லோ நில்குன்னு
இதில் ஒன்பது கண்டங்ஙள் உண்டல்லோ
அதிலுத்தமம் பாரத பூதலம்
சம்மதராய மாமுனி சிரேஷ்டன்மார்
கர்ம்ம க்ஷேத்ர மென்னல்லொ பறயுன்னு
கர்ம்ம பீஜ மதீன்னு முளய்க்கேண்டு
பிரம்ம லோகத்திரிக்குன்ன வர்கள்க்கும்
கர்ம பீஜம் வரட்டிக்களஞ்ஞுடன்
ஜன்ம நாசம் வருத்தேண மெங்கிலும்
பாரதமாய கண்ட மொழிஞ்ஞுள்ள
பாரிலெங்ஙும் எளுதல்ல நிர்ணயம்
அத்ர முக்கிய மாயுள்ளொரு பாரதம்
இப்பிரதேச மென்னொல்லாரும் ஓர்க்கணம்

கலிகால மஹிம

யுகம் நாலிலும் நல்லூ கலியுகம்
சுகமேதன்னெ முக்தி வருத்துவான்
கிருஷ்ண கிருஷ்ண முகுந்த ஜனார்த்தன
கிருஷ்ண கோவிந்த ராம என்னிங்கனெ
திருநாம ஸங்கீர்த்தன மென்னியே
மற்றில்லேதுமே யத்ன மறிஞ்ஞாலும்
அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்
பதிம்மூன்னிலுமுள்ள ஜனங்ஙளும்
மற்று த்வீபுகள் ஆறிலும் உள்ளோரும்
மற்று கண்டங்ஙள் எட்டிலும் உள்ளோரும்
மற்று மூன்னு யுகங்ஙளில் உள்ளோரும்
முக்தி தங்ஙள்க்கு சாத்யமல்லாய்கயால்
கலிகாலத்தெ பாரத கண்டத்தே
கலிதாதரம் கை வணங்ஙீடுன்னு
அதில் வன்னொரு புல்லாயிட்டெங்ஙிலும்
இது காலம் ஜனிச்சு கொண்டீடுவான்
யோக்யத வருத்தீடுவான் தக்கொரு
பாக்யம் போராதெ போயல்லோ தெய்வமே
பாரத கண்டத்திங்கல் பிறந்நொரு
மானுஷர்க்கும் கலிக்கும் நமஸ்காரம்
என்னெல்லாம் புகழ்த்தீடுன்னு மற்றுள்ளோர்
என்ன தெந்தினு நாம் பறஞ்ஞீடுன்னு?

என்தின்றே குறவு ?

காலமின்னு கலியுக மல்லயோ
பாரத மிப்ப்ரதேசவு மல்லயோ
நம்மளெல்லாம் நரன்மாரு மல்லயோ
செம்மே நன்னாய் நிரூபிப்பினெல்லாரும்
ஹரி நாமங்ஙளில்லாதெ போகயோ
நரகங்ஙளில் பேடி குறகயோ
நாவு கூடாதெ ஜன்ம அதாகயோ
நமுக்கின்னி வினாச மில்லாய்கயோ
கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதே
சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதே நாம்

துர்லபமாய மனுஷ்ய ஜன்மம்
எத்ர ஜன்மம் பிரயாசப்பெட்டிக்காலம்
அத்ர வன்னு பிறன்னு சுக்ருதத்தால்
எத்ர ஜன்மம் மலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜன்மம் ஜலத்தில் கழிஞ்ஞதும்
எத்ர ஜன்மங்ஙள் மண்ணில் கழிஞ்ஞதும்
எத்ர ஜன்மம் மரங்ஙளாய் நின்னதும்
எத்ர ஜன்மம் மரிச்சு நடன்னதும்
எத்ர ஜன்மம் மிருகங்கள் பசுக்களாய்
அது வன்னிட்டிவண்ணம் லபிச்சொரு
மர்த்ய ஜன்மத்தின் முன்பே கழிச்சு நாம்
எத்ரயும் பணிப்பெட்டிங்ஙு மாதாவின்
கர்ப பாத்ரத்தில் வீணதறிஞ்ஞாலும்
பத்து மாசம் வயிற்றில் கழிஞ்ஞு போய்
பத்து பந்தீராண்டு உண்ணியாயிட்டும் போய்
தன்னெத்தானபிமாநிச்சு பின்னேடம்
தன்னெத்தானறியாதே கழியுன்னு
இத்ர காலம் இரிக்கும் இனியென்னும்
சத்யமோ நமக்கேதும் ஒன்னில்லல்லோ
நீர்ப்போள போலெ உள்ளொரு தேஹத்தில்
வீர்ப்பு மாத்ரம் உண்டு இங்ஙனெ காணுன்னு
ஒர்த்து அறியாதே பாடு பெடுன்னேரம்
நேர்த்து பொகுமதென்னே பறயாவூ
அத்ர மாத்ரம் இரிக்குன்ன நேரத்து
கீர்த்தி சீடுன்னதில்ல திருநாமம்

ஸம்ஸார வர்ணன

ஸ்தான மானங்ஙள் சொல்லி கலஹிச்சு
நாணம் கெட்டு நடக்குன்னிது சிலர்
மத மத்சரம் சிந்திச்சு சிந்திச்சு
மதி கெட்டு நடக்குன்னிது சிலர்
சஞ்சலாக்ஷிமார் வீடுகளில் புக்கு
குஞ்சிராமனா யாடுன்னிது சிலர்
கோலகங்ஙளில் ஸேவகராயிட்டு
கோலம் கெட்டி ஞெளியுன்னிது சிலர்
சாந்தி செய்து புலர்த்துவானாயிட்டு
சந்த்ய யோளம் நடக்குன்னிது சிலர்

அம்மய்க்கும் புனர் அச்சனும் பார்யய்க்கும்
உண்மான் போலும் கொடுக்குன்னில்ல சிலர்
அக்னி சாக்ஷிணியாயொரு பத்னியெ
ஸ்வப்னத்தில் போலும் காணுன்னில்ல சிலர்
சத்துக்கள் கண்டு சிக்ஷிச்சு சொல்லும் போள்
சத்ருவெ போலெ க்ருத்திக்குன்னு சிலர்
வந்திதன்மாரே காணுன்ன நேரத்து
நிந்திச்சத்ரே பறயுன்னிது சிலர்
காண்க நம்முடெ சம்சாரம் கொண்டத்ரே
விஸ்வ மீவண்ணம் நில்பூவென்னும் சிலர்

பிராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு
பிரஹ்ம்மாவும் எனிக்கு ஒக்கயென்னும் சிலர்
அர்த்தாசக்கு விருது விளிப்பிப்பான்
அக்னி ஹோத்ராதி செய்யுன்னிது சிலர்
ஸ்வர்ணங்கள் நவரத்னங்ஙளெக் கொண்டும்
எண்ணம் கூடாதே வில்குன்னிது சிலர்
மத்தேபம் கொண்டு கச்சவடம் செய்தும்
உத்தம துரகங்ஙளது கொண்டும்
அத்ரயுமல்ல கப்பல் வெப்பிச்சிட்டும்
எத்ர நேடுன்னிது அர்த்தம் சிவ சிவ
வ்ரித்தியும் கெட்டு தூர்த்தராயெப்போழும்
அர்த்தத்தே கொதிச்செத்ர நசிக்குன்னு
அர்த்த மெத்ர வளரே யுண்டாயாலும்
திருப்தியாகா மனஸ்ஸின்னொரு காலம்
பத்து கிட்டுகில் நூறு மதி என்னும்
சதமாகில் ஸஹஸ்ரம் மதி என்னும்
ஆயிரம் பணம் கையில் உண்டாகும் போள்
ஆயுதமாகில் ஆச்சர்யமென்னதும்
ஆசயாயுள்ள பாசமதிங்ஙேன்னு
வேர்விடாதே கரெறுன்னு மேல்க்கு மேல்
சத்துக்கள் சென்னிரன்னால் ஆய அர்த்தத்தில்
ஸ்வல்ப மாத்ரம் கொடா சில துஷ்டன்மார்
சத்து போம் நேரம் வஸ்த்ரமது போலும்
ஒத்திடா கொண்டு போவானொருத்தர்க்கும்

பஸ்ச்சாத்தாபம் ஓரெள்ளோளம் இல்லாதெ
விஸ்வாஸ பாதகத்தே கருதுன்னு
வித்தத்தில் ஆச பற்றுக ஹேதுவாய்
சத்யத்தே த்யஜிக்குன்னு சிலரஹோ
சத்யமென்னது ப்ரம்மமது தன்னே
சத்யமென்னு கருத்துன்னு சத்துக்கள்
வித்ய கொண்டறி யேண்டதறியாதெ
வித்வான் என்னு நடிக்குன்னிது சிலர்
குங்குமத்தின்றே கந்தம் அறியாதே
குங்குமம் சுமக்கும் போலே கர்த்தபம்
கிருஷ்ண கிருஷ்ண நிரூபிச்சு காணும் போள்
த்ருஷ்ண கொண்டும் ப்ரமிக்குன்னெ தொக்கெயும்

வைராக்யம்

எண்ணி எண்ணி குறையுன்னி தாயுஸ்ஸும்
மண்டி மண்டி கரேறுன்னு மோஹவும்
வன்னு ஓணம் கழிஞ்ஞு விஷு வென்னும்
வன்னி லல்லோ திருவாதிர என்னும்
கும்ப மாசத்திலாகுன்னு நம்முடெ
ஜன்ம நக்ஷத்ரம் அஸ்வதி நாளென்னும்
ஸ்ராத்த முண்டகோ விருச்சிக மாஸத்தில்
ஸத்ய ஒன்னும் எளுதல்லினியென்னும்
உண்ணி உண்டாயி வேள்பிச்சதிலொரு
உண்ணி உண்டாயிக் கண்டாவூ ஞானென்னும்
இத்ரமோரோன்னு சிந்திச்சிரிக்கும்போள்
சத்து போகுன்னு பாவம் சிவ சிவ
எந்தினித்ர பறஞ்ஞு விசேஷிச்சும்
சிந்திச்சீடுவின் ஆவோளம் எல்லாரும்
கர்மத்தின்றே வலிப்பவும் ஒரோரோ
ஜன்மங்ஙள் பலதும் கழிஞ்ஞென்னதும்
காலமின்னு கலியுக மாயதும்
பாரத கண்டத்தின்றே வலிப்பவும்
அதில் வன்னு பிறன்னதும் எத்ர நாள்
பழுதே தன்னே போய பிரகாரவும்
ஆயுஸ்ஸின்றே பிரமாண மில்லாத்ததும்
ஆரோக்யத் தோடிரிக்குன்னவஸ்தயும்
இன்னு நாம சங்கீர்த்தனம் கொண்டுடன்
வன்னு கூடும் புருஷார்த்த மென்னதும்
இனியுள்ள நரக பயங்ஙளும்
இன்னு வேண்டும் நிருபணமொக்கயும்
எந்தினு விருதா காலம் களயுன்னு?
வைகுண்டத்தினு போய்க்கொள்வின் எல்லாரும்

கூடியல்லா பிறக்குன்ன நேரத்து
கூடியல்லா மரிக்குன்ன நேரத்தும்
மத்யே இங்ஙனெ காணுன்ன நேரத்து
மல்சரிக்குன்ன தெந்தினு நாம் வ்ருதா
அர்த்தமோ புருஷார்த்தம் இரிக்கவே
அர்த்ததின்னு கொதிக்குன்னதெந்துநாம்
மத்யாஹ்னார்க்குப் பிரகாச மிரிக்கவே
கத்யோதத்தெயோ மானிச்சு கொள்ளேண்டு
உண்ணிக் கிருஷ்ணன் மனஸ்ஸில் களிக்கும் போள்
உண்ணிகள் மற்று வேணமோ மக்களாய்
மித்ரங்ஙள் நமுக்கெத்ர சிவ சிவ
விஷ்ணு பக்தன்மாரில்லே புவனத்தில்
மாய காட்டும் விலாசங்ஙள் காணும் போள்
ஜாய காட்டும் விலாசங்ஙள் கோஷ்டிகள்
புவனத்திலெ பூதிகளொக்கெயும்
பவனம் நமக்கு ஆயதிது தன்னே
விஸ்வநாதன் பிதாவு நமுக்கெல்லாம்
விஸ்வ தாத்ரி சராசர மாதாவும்
அச்சனும் புனர் அம்மையும் உண்டல்லோ
ரக்ஷிச்சீடுவான் உள்ள நாளொக்கயும்
பிக்ஷான்னம் நல்லார் அன்னவும் உண்டல்லோ
பக்ஷிச்சீடுக தன்னே பணியுள்ளு

நாம ஜபம்

சக்தி கூடாதெ நாமங்ஙள் எப்பொழும்
பக்தி பூண்டு ஜபிக்கணம் நம்முடெ
சித்த காலம் கழிவோள மீவண்ணம்
ஸ்ரத்தயோடே வசிக்கேணமேவரும்
காணாகுன்ன சராசர ஜீவியெ
நாணம் கைவிட்டு கூப்பி ஸ்துதிக்கணம்
ஹரிஷாஸ்ரு பரிப்லுதனாயிட்டு
பருஷாதிகளொக்கெஸ்ஸஹிச்சுடன்
ஸஜ்ஜனங்களெ காணுன்ன நேரத்து
லஜ்ஜ கூடாதே வீணு நமிக்கணம்
பக்தி தன்னில் முழுகி சமஞ்ஞுடன்
மத்தனே போலே ந்ருத்தம் குதிக்கணம்
பாரில் இங்ஙனெ ஸஞ்சரிச்சீடும் போள்
பிராரப்தங்ஙள் அசேஷம் ஒழிஞ்ஞிடும்
விதிச்சீடுன்ன கர்மங்கள் ஒடுங்ஙும் போள்
பதிச்சீடுன்னு தேஹம் ஒரேடத்து
கொதிச்சீடுன்ன ப்ரம்மத்தே கண்டிட்டு
குதிச்சீடுன்னு ஜீவனும் அப்போழே
சக்தி வேறிட்டு ஸஞ்சரிச்சீடும் போள்
பாத்ரம் ஆயில்ல என்னது கொண்டேதும்
பரிதாபம் மனஸ்ஸில் முழுக்கேண்ட
திருநாமத்தின் மஹாத்ம்யம் கேட்டாலும்
ஜாதி பார்க்கிலொரு அந்த்ய ஜநாகிலும்
வேதவாதி மஹீஸுரனாகிலும்
நாவு கூடாதே ஜாதன்மாராகிய
மூகரெயங்கொழிச்சுள்ள மானுஷர்
எண்ணமற்ற திருநாமம் உள்ளதில்
ஒன்னு மாத்ரம் ஒரிக்கல் ஒரு தினம்
ஸ்வஸ்தன் ஆயிட்டு இருக்கும் போழெங்கிலும்
ஸ்வப்னத்தில் தான் அறியாதெ எங்கிலும்
மற்றொன்னாயி பரிஹஸிச்செங்கிலும்
மற்றொருத்தர்க்கு வேண்டியென்னாகிலும்

ஏது திக்கிலிருக்கிலும் தன்னுடே
நாவு கொண்டிது சொல்லி என்னாகிலும்
அதுமல்லொரு நேரம் ஒரு தினம்
செவி கொண்டிது கேட்டு என்னாகிலும்
ஜன்ம சாபல்யம் அப்போழே வன்னு போய்
ப்ரம்ம ஸாயுஜ்யம் கிட்டீடும் என்னேல்லோ
ஸ்ரீதர் ஆச்சார்யன் தானும் பரஞ்ஞிது
பாதராயணன் தானும் அருள் செய்து
கீதயும் பரஞ்ஞீடுன்னதிங்ஙனெ
வேதவும் பஹுமாநிச்சு சொல்லுன்னு

அமோதம் பூண்டு சொல்லுவின் நாமங்ஙள்
ஆனந்தம் பூண்டு ப்ரஹ்ம்மத்தில் சேருவான்
மதியுண்டெங்கிலொக்க மதியிது
திருநாமத்தின் மாஹாத்யமாமிது
பிழையாகிலும் பிழ கேடென்னாகிலும்
திருவுள்ளம் அருள்க பகவானே
பொருள்

கடவுள் வணக்கம்

என்னுடைய குருநாதனான குருவாயூரப்பன் எனக்குத் துணை புரிவாராக. என்னுடைய இந்த மனித ஜன்மத்தை முழுமையாக்கிட நான் எப்பொழுதும் பகவானுடைய திருநாமங்களை ஜபித்துக் கொண்டிருக்கவேண்டும்.

இறைவனின் லீலைகள்

போன ஜன்மத்தில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இனி அடுத்த ஜன்மத்தில் என்ன நடக்கும் என்பதும் தெரியாது. எந்த நேரத்தில் நம் உயிர் இந்த உடலை விட்டுப் பிரியும் என்பதும் யாருக்கும் தெரியாது.

நாம் தினமும் கண்டு கொண்டிருப்பவர்களை காணாமல் போகச் செய்பவனும் இறைவன். இரண்டு நாலு தினங்களில் ஒருவனை அரசனாக்குவதும், அரண்மனையில் வசிக்கும் அரசனை ஆண்டியாக்குவதும் அதே இறைவன் தான் .

இந்த உண்மை சிலருக்குப் புரிகிறது. சிலருக்குப் புரிவதில்லை. சிலருக்கு நம் கண் முன் காண்பவை எல்லாம் மாயை என்பது புரிகிறது. மனிதர்களுக்கு பகுத்தறிவு இருந்தாலும் இந்த உண்மையைப் புரிந்து கொள்வதில் மனிதர்கள் வேறு படுகிறார்கள்.

வாழ்க்கைத் தத்துவம்

சுழன்று கொண்டிருக்கின்ற இந்த மனித வாழ்க்கையில் இந்த உண்மையை நமக்குப் புரிய வைக்க பல ஞானிகள் முயன்றிருக்கிறார்கள். நாம் அதைச் செவி கொடுத்துக் கேட்க வேண்டும்.

நமது கர்மங்களுக்கு நாம் தான் பொறுப்பு. நம்முடைய கர்மங்கள் தான் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப் படுத்துகிறது. இந்த உலகில் கர்மன்களைக் கட்டுப் படுத்துவது ஜோதி வடிவான அந்தப் பரம்பொருளாகும். அந்தப் பரம்பொருளை யாராலும் அடைய முடியாது. யாராலும் அந்தப் பரம்பொருளை அழிக்கவும் முடியாது. பற்று அற்றவர்களால் மட்டுமே அதனை உணர முடியும்.

இந்த உலகில் மூன்று விதமான் கர்மங்கள் இருக்கின்றன. ஒன்று புண்ய கர்மங்கள். இரண்டாவது பாவ கர்மங்கள். மூன்றாவது பாவமும் புண்ணியமும் கலந்த கர்மங்கள். நமது வாழ்க்கை இந்த மூன்று கர்மங்களால் ஆனது.

பிரளயத்திற்க்கு பின்னர் இந்த உலகைப் படைத்த பிரம்மனுக்கும் திக்பாலகர்களுக்கும் கூட தங்களுடைய கர்மங்களைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அவ்வாறு இருக்க தாயின் கர்ப்பத்தில் இருந்து மீண்டும் மீண்டும் வந்து குறுகிய காலமே வாழுகின்ற நம்மைப் போன்ற சிறிய ஜீவிகளால் என்ன செய்ய முடியும்?

பிறப்பின் ரகசியம்

நரகத்தில் கிடக்கும் ஒரு ஜீவன், அது செய்த பாவ கர்மங்களுடைய பலனை அனுபவித்த பிறகு இந்த பூமியில் மனிதனாகப் பிறக்கிறது. புண்ணிய கர்மங்கள் செய்தவர் சொர்க்கத்தில் சென்று சுகமாக அதன் பலன் தீரும் வரை வாழ்கின்றனர். அந்த ஜீவன் மனிதனாகப் பிறக்கும் போது பல பாவ கர்மங்களைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் மீண்டும் நீசர்களாகப் பிறக்கிறார்கள். அசுரர்கள் தேவர்கள் ஆகிறார்கள். தேவர்கள் மரங்களாகிறார்கள். ஆடு அடுத்த பிறவியில் யானை ஆகிறது. யானை மீண்டும் அடுத்தப் பிறவியில் ஆடாகப் பிறக்கிறது. நரி மனிதாகவும், பெண் நரியாகவும் மறு பிறவி எடுக்கிறார்கள். இரக்கமில்லாத அரசன் ஈயாகப் பிறக்கிறான். ஈ சாகும் பொது பூனையாகப் பிறக்கிறது. இவை எல்லாம் கடவுளின் செயல்களே. இவ்வாறு மேலும் கீழும் போய்க் கொண்டிருக்கும் ஜீவன்கள், இந்த உலகில் வாழும் போது அவர்கள் செய்யும் புண்ணிய கர்மங்கள்தான் அவர்களுக்கு முக்தியைக் கொடுக்கிறது.

பாரத தேசத்தின் பெருமை

இந்த பூமியில் நாம் நம்முடைய கர்மங்களைச் செய்கிறோம். இந்த பூமியில் தான் நாம் செய்த பாவ கர்மங்களின் பலனை அனுபவிக்கிறோம்.. தன்னுடைய பக்தர்களுக்கும் புண்ணிய கர்மங்கள் செய்தவர்களுக்கும் அவர்கள் வேண்டும் பலன்களை பூமாதேவி கொடுக்கிறாள்.

இந்த பூமி ஒன்பது பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது இந்த ஒன்பது பாகங்களிலும் சிறந்தது பாரத நாடாகும். ஞானிகள் இந்த பாரதத்தை கர்ம பூமி என்று அழைக்கிறார்கள். பிரம்ம லோகத்தில் உள்ளவர்களும் புண்ணிய கர்மங்களை இந்த பூமியில் தான் செய்யவேண்டும் . நாம் அனைவரும் இந்த பாரதத்தில் பிறக்க எத்தனைப் புண்ணியங்கள் செய்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கலியுகத்தின் பெருமை

முக்தியை அடைய எளிய மார்க்கம் இந்த கலியுகத்தில் தான் உள்ளது . நாம சங்கீர்த்தனம் தான் அந்த எளிய மார்க்கம். அதற்கு நான்கு யுகங்களிலும் சிறந்தது இந்தக் கலி யுகம் தான். முக்தியை அடைய வேறு எந்த முயற்சியும் தேவை இல்லை. இதை உணர்ந்த மற்ற பதின்மூன்று உலகங்களிலும் , ஆறு தீவுகளிலும் எட்டு கண்டங்களிலும், மூன்று யுகங்களிலும் வாழ்கின்றவர்கள் இந்த கலி யுகத்தில் பாரத கண்டத்தில் வாழ்பவர்களை வாழ்த்துகிறார்கள்.

நமது அறிவின்மை

இவ்வாறு பல பிறவிகளையும் எடுத்து புண்ணிய கர்மங்கள் செய்வதற்காக இந்த பூமியில் பிறந்துள்ளோம். காடுகளிலும், தண்ணீரிலும் மண்ணிலும் மரங்களாகவும் விலங்குகளாகவும் பிறவிகள் எடுத்துள்ளோம். பெரும் முயற்சிக்குப் பிறகு தாயின் வயிற்றில் கருவாக உருவாகி பத்து மாதங்கள் வயிற்றில் கிடந்தோம். பிறகு ஒன்றும் அறியாத குழந்தைகளாக பல காலம் வளர்ந்தோம். பின்னர் நமது அறிவின்மையால் செருக்கோடு நடந்தோம். இனி எத்தனை காலம் வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியாது. அப்படி நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் இறைவன் நாமத்தைச் சொல்ல மறந்து விடுகிறோம்.

சிலர் பதவிகளுக்காகப் போட்டி இடுகிறார்கள். சிலர் ஜாதி மதங்களைச் சொல்லி வேற்றுமையை உருவாக்குகிறார்கள். சிலர் தனது தாய் தந்தையரையும் மனைவியையும் நினைத்து கூடப் பார்ப்பதில்லை. அவர்களைத் திருத்த நினைப்பவரை எதிரியாகக் காண்கிறார்கள். சிலர் அறிஞர்களை அவமானப் படுத்துகிறார்கள். சிலர் தாங்கள் கடவுளுக்கு நிகர் என்று நினைக்கிறார்கள். வியாபாரங்கள் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பத்து கிடைத்தால் நூறு வேண்டும் என்று நினைக்கிறார்கள். நூறு கிடைத்தால் அவர்களுக்கு ஆயிரம் வேண்டும். ஆனால் நல்லவர்கள் உதவி கேட்டு வரும் போது அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை.நாம் இறக்கும் போது இந்த செல்வத்தைக் கொண்டு போவதில்லை என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது. ஆனால் ஆசைகள் கூடிக்கொண்டே போகின்றன. ஓணப்பண்டிகை வரும். அது முடிந்தால் விஷு வரும், கும்ப மாதத்தில் என் ஜன்ம நக்ஷத்திரம் வரும், என் குழந்தைகளுக்குத் திருமணம் நடக்கும். பின்னர் அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும் என்று நாம் ஒவ்வொருவரும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது நாம் செய்ய வேண்டிய புண்ணிய கர்மங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதற்குத் தான் இந்த கலி யுகத்தில் இந்த பாரத கண்டத்தில் பிறந்திருக்கிறோம். நல்ல கர்மங்களைச் செய்துப் பின்னர் இங்கு நேரத்தை வீணாக்காமல் வைகுண்டம் செல்வதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

நாம் ஒன்று சேர்ந்து பிறக்கவில்லை. ஒன்றாக இறக்கப் போவதும் இல்லை. அப்படி இருக்கும் போது நாம் ஏன் மற்றவரைப் பார்த்து அவருடன் போட்டியிட வேண்டும். இந்த உலகம் தான் நம் வீடு. இறைவனும் இறைவியும் தான் நம் தாய் தந்தையர். அவர்கள் நமக்கு உணவளித்து நம்மைக் காப்பற்றுவார்கள்.

நாம சங்கீர்த்தனம்

ஆசைகளை ஒழித்து இறைவன் நாமத்தை எப்பொழுதும் நம் வாழ் நாள் முழுவதும் ஜபிக்க வேண்டும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனையும் நாம் வாழ்த்த வேண்டும். நல்லவர்களைக் கண்டால் வணங்க வேண்டும். இறைவனைப் புகழ்ந்து மெய்மறந்து ஆடிப்பாடி துதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நம் கஷ்டங்கள் நம்மை விட்டு விலகும். நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்கள் தீரும் போது நம்முடைய ஆத்மா நம் உடலை விட்டு விலகி சத்தியமான அந்த இறைவனைச் சென்று அடையும்.

நாம் எந்த ஜாதியில் பிறந்தாலும் எந்த இடத்தில் இருந்தாலும் தினமும் ஒரு தடவையாவது குருவாயூரப்பனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். உச்சரிக்க முடியவில்லை என்றால் ஒரு முறையாவது அவன் நாமத்தைப் பிறர் சொல்லக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்தால் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.

இதைத்தான் பாகவதத்துக்கு உரை எழுதிய ஸ்ரீதர் ஆச்சார்யாரும், வேதவியாசரும் கீதையில் கிருஷ்ணனும் கூறியுள்ளனர் . அதனால் முழுமனதுடன் இறைவன் நாமத்தை ஜெபியுங்கள். மன உறுதி இருந்தால் உங்களால் அது முடியும்.

இந்த பாடல்களில் ஏதாவது பிழைகள் இருந்தால் அந்த இறைவன் என்னை மன்னித்து அருள்வானாக.

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 378

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 689

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 456

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 379

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 377

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN