காசில் கொற்றத்து இராமன் கதை

0 comments
Kamban

கம்பர்

                           உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
                           நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
                          அலகிலா விளையாட்டுடையாரவர்
                          தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

யாமறிந்த புலவரிலே கம்பனை போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப்  போல் பூமி தனில் யாங்கணுமே  கண்டதில்லை  என்றார் மகாகவி பாரதியார். கம்பனைக் ‘கவி சக்கரவர்த்தி கம்பர்’ என்று புகழ்வர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி  பாடும் என்பது கம்பனின் கவிப்புலமையை  விளக்கும்.
.
கம்பன் எழுதிய மகா காவியமான கம்ப  ராமாயணம் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. கம்ப ராமாயணத்தின் மூலம் வடமொழியில் எழுதப்பட்ட  வால்மீகியின் ராமாயணம். கம்பன் சோழ நாட்டில் திருவெழுந்தூரில் வாழ்ந்தவர்.  கம்பர் தான் எழுதிய இராமயணத்தை ‘காசில் கொற்றத்து இராமன் கதை’  என்று குறிப்பிடுகிறார். அதாவது ‘குற்றமற்ற வெற்றியையுடைய இராமனது கதை’ என்று அர்த்தம்.
.
                         நாரணன் விளையாட்டெல்லாம்  நாரத    முனிவன் கூற 
                        ஆரணக் கவிதை செய்தான் அறிந்து வான்மீகி என்பான் 
                        சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன் 
                        காரணக் கொடையான் கம்பன் தமிழில் நூல்க்கவி செய்தோனே  
.
கம்பர்  ராமாயணத்தை பால காண்டம், அயோத்யா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களாக பிரித்து பாடியுள்ளார்.கம்ப ராமாயணத்தில் மொத்தம் 10000 பாடல்களுக்கு மேல் உள்ளது. காலப் போக்கில் இந்நூலில் சில இடைச்செருகல்களும் கம்பன் பாடிய சில பாடல்கள் விட்டுப் போனதும் உண்டு என்பர்.
.

கம்பர் இதனை ஒரு நாளைக்கு 700 பாடல்கள் வீதம் எழுதினார் என்பர்.  தினமும் இரவு நேரத்தில் வால்மீகியின் இராமாயணத்தை வடமொழி புலவர்களைப் படிக்க சொல்லி அதனை பகல் நேரத்தில் தம் மாணக்கர்களுக்கு தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவார்.

.

விழுந்த ஞாயிறு எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவி பாடினது எழுநூறே

கம்பர் நன்றி மறவாதவர்.  தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பத்து இடங்களில் புகழ்ந்து பாடியுள்ளார்.
.
கம்ப ராமாயணம் திருவரங்கத்தில் மேட்டழகிய சிருங்கர் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது எம்பெருமான் தலையை அசைத்து அங்கீகாரம் செய்ததாகவும் இரணியன் வதை படலத்தில் பெருங்கர்ஜனை புரிந்ததாகவும் கூறுவர். கம்பர் நாகபாச படலம்  பாடும்போது பாம்பு தீண்டி இறந்த குழந்தை ஒன்று   பிழைத்து எழுந்தது என்றும் வரலாறு உண்டு.
.

கம்பனின் அவையடக்கம்

இத்தனைப் புகழ் பெற்ற காவியத்தை இயற்றிய கம்பன் துவக்கத்தில் தன்னைப் பற்றிக் கூறுவதைக் கேட்டால் வியப்புத் தோன்றும்.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ

பெரிய ஓசையுடன் கூடிய அலைகள் வீசும் பாற்கடலுக்குச் சென்ற பூனை கடற்கரையில் நின்றவாறு இந்தப் பால் முழுவதையும் நக்கிக் குடித்துவிட வேண்டும் என்று விரும்புவதைப் போல, குற்றமில்லாத வெற்றியை உடைய இராமன்  கதையை நான் என்னுடைய ஆசையினாலே சொல்லத் துவங்குகிறேன்.

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே

.

இந்த உலகம் என்னை இகழலாம் . என் பெயர் மாசடையலாம் . இருந்தாலும் நான் இராமனின் கதையைச் சொல்லும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறேன் என்றால் அது சற்றும் பொய் கலவாத அறிவும் புலமையும் உடையவர்கள் எழுதிய தெய்வீகமான பெருங் காவியத்தின் பெருமையைக் தெரிவிக்கவே .

.
இராம பிரானின் சரிதத்தை பாராயணம் செய்பவர்க்கு அவர்கள் தேடிய பொருள்கள் கைகூடும். ஞானமும்  புகழும் உண்டாகும். இராமனின்  அருளால் மறுமை பயனாகிய மோட்சமும் கைகூடும்
.
                        நாடிய பொருள் கைகூடும் ஞானமும்  புகழும் உண்டாம்
                        வீடியல் வழியது ஆக்கும் வேரியம் கமலை நோக்கும்
                        நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
                       சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 378

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 689

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 456

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 379

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 377

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN