கம்பனின் நன்றி மறவாமை

1 comments
Kambar

கம்பன் நன்றி மறவாதவர். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பற்றி 10 பாடல்கள் கம்ப ராமாயணத்தில் பாடியுள்ளார். அதாவது ஒவ்வொரு ஆயிரம் பாடல்களுக்கும் ஒரு பாடல் வீதம் சடையப்ப வள்ளலைக் குறிபிட்டுள்ளார். இதோ அந்த 10 பாடல்கள்.

நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே

விண்ணவர் போய பின்றை விரிந்த பூ மழையினாலே
தண்ணென்னும் காண நீங்கித் தாங்கருந் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்தன சடையன் வெண்ணெய்
அண்ணல் சொல்லே யன்ன படைக்கலம் அருளினானே

அரமடந்தையர் கற்பகம் நவநிதி அமிர்தம்
சுரபி வாம்பரி மதமலை முதலிய தொடக்கத்து
ஒருபெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின்

வண்ண மாலைக் கைபரப்பி உலகை வளைத்த இருள் எல்லாம்
உண்ண எண்ணித் தண்மதியத்து உதயத்து எழுந்த நிலாக் காற்றை
விண்ணும் மண்ணும் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநல்நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன் புகழ் போல் எங்கும் பரந்துளதால்

மஞ்சினில் திகழ் தரும் மலையை மாக்குரங்கு
எஞ்சுரக் கடிது எடுத்து எறியவே நளன்
விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில்
தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்

வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும்
தேசம் கலந்த மறைவாணர் செஞ் சொல் அறிவாளர் என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம்

வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான்
கன்னிநாள் திருவைச் சேரும் கண்ணனும் ஆளும் காணி
சென்னிநாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன் தெய்வப்
பொன்னாட் டுவமை வைப்பப் புலன் கொள நோக்கிப் போனான்

அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டுச்
சந்தணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்
உய்ந்தனம் அடிய மென்னும் உவகையின் உவரி காண
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள்

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த
பரதன் வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி

மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல்
முறை செயும் அரசர் திங்கள் மும் மழை வாழி மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி இக் கதை கேட்போர் வாழி
அறை புகழ்ச் சடையன் வாழி அரும் புகழ் அனுமன் வாழி

COMMENTS

P.R.Ramachander at 27 Jun 2014

I have started translating the Kamba Ramayanam in to englsh verse by verse. So far I have completed the translation of Bala Kandam and Ayodhya Kandam. You can see them at http://englishkambaramayanam.blogspot.in/

1 2 3 5

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 525

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 1045

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 674

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 587

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 529

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN