இலட்சுமண ரேகை

1 comments
Sita-Haran

அழகிய மானின் வடிவில் வந்தது மாரீசன் என்ற அரக்கன் என்று அறியாத சீதை அம்மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டுகிறாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற இராமன், இலட்சுமணனை சீதைக்குக் காவல் வைத்து விட்டு மானைப் பிடிக்க செல்கிறான். மான் இராமனை வெகு தொலைவில் கொண்டு சென்றது. மானின் வடிவில் வந்தது மாரீசன் என்று பின்னர் அறிந்த இராமன் அம்மானை அம்பை விட்டுக் கொல்கிறான். இறப்பதற்கு முன் மாரீசன் இராமனின் குரலில் ‘சீதே.. இலட்சுமணா..” என்று அலறி உயிரை விட்டான்.

அதைக் கேட்ட சீதை மிகவும் துக்கித்து இலட்சுமணனை இராமனைத் தேடிப் போகச் சொல்கிறாள். இராமனின் கட்டளையால் சீதையை விட்டுச் செல்ல மறுத்த இலட்சுமணனுக்கு சீதையின் நிர்பந்தத்தால் வேறு வழி இல்லாமல் சீதையை பர்ண சாலையில் விட்டுவிட்டுச் செல்கிறான். செல்லுமுன் சீதையைப் பாதுகாக்க பர்ண சாலையைச் சுற்றும் ஒரு கோட்டை வரைக்கிறான். அந்தக் கோட்டை இலட்சுமண ரேகை என்று கூறுவர். அக்கோடினைத் தாண்டி சீதை, இராமன் மற்றும் இலட்சுமணன் அல்லாது வேறு யாராவது நுழைந்தால் தீயில் சிக்கி அழிந்து விடுவர்.

இலட்சுமணன் சென்ற பின் இராவணன் ஒரு முனிவன் வடிவில் வந்து சீதையிடம் பிட்சை கேட்கிறான். பிட்சை இடவந்த சீதையிடம் இலட்சுமணன் வரைத்த கோட்டை விட்டு வெளியே வந்து இடுமாறு வேண்டுகிறான். அவ்வண்ணம் வெளியே வந்த சீதையை இராவணன் தூக்கிச் செல்கிறான்.

இந்த இலட்சுமண ரேகையைப் பற்றி வால்மீகி இராமாயணத்திலோ கம்ப ராமாயணத்திலோ எதுவும் கூறப் படவில்லை. ஆனால் துளசி ராமாயணத்திலும் மற்று சில இராமாயண நூல்களிலும் இலட்சுமண ரேகையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. துளசி ராமாயணத்திலும் ஆரண்ய காண்டத்தில் கூறாமல் பின்னர் லங்கா காண்டத்தில் மண்டோதரி இராவணனிடம் கூறுவதாக வருகிறது.

இந்த இலட்சுமண ரேகை சம்பவம் தற்காலத்தில் பல இடங்களிலும் மீறக் கூடாத சில விதிகளுக்கும் நெறி முறைகளுக்கும் மேற்கோளாக காட்டப் பட்டு வருகிறது. அந்த நெறிமுறைகளை மீறும் போது அவை மனிதருக்கு பல விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இராமாயணம் உணர்த்துகிறது .

COMMENTS

jayapriya at 03 Jul 2014

very nice

1 2 3 5

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

  • கந்தர் அலங்காரம்

    0 377

    அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

    View more
  • Thirunallar

    1 686

    The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

    View more
  • Vallalar Temple,

    0 453

    Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

    View more
  • Cheraman Juma

    0 377

    Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

    View more
  • சங்கராய சங்கராய

    0 375

    சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

    View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN