இராமாயணம் பிறந்த கதை

1 comments
Valmeeki

வால்மீகி 

ஒரு முறை நாரத முனிவர் காட்டில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு திருடன் அவரை வழி மறித்தான்.  அவர் அவன் செய்யும் பாவத்தில் அவனுடைய குடும்பத்தினருக்கும் பங்கு உணடோ  என்று  வீட்டில் உள்ள குடும்பத்தினரிடம் சென்று கேட்கச் சொன்னார். வீட்டில் உள்ளவர்களோ தங்களுக்கு அவனுடைய பாவத்தில் யாதொரு பங்கும் இல்லை என்று கூறிய போது அந்தத் திருடன் மனம் திருந்தினான்.  பிறகு அவன் நாரதரிடம்  இந்த உலகில் சத்தியமும் ஒழுக்கமும் வீரமும் உள்ள உத்தமன் யார் என்று கேட்க, நாரத முனிவர் அதற்கு அந்த வீரன் இக்ஷவாகு வம்சத்தில் பிறந்த தசரத புத்திரன் இராமன் என்று கூறி 100 சுலோகங்களில் இராமாயணத்தைப் பாடினார்.

தனக்கு நல்வழி காட்டும்படி கூறிய அவனிடம் நாரதர்  ராம நாமத்தை ஜபிக்கச் சொன்னார்.  ராம நாமத்தை பல காலங்களாக ஜபித்து தவ வலிமை அடைந்த அந்தத் திருடன் தான் வால்மீகி முனிவர் ஆனார்.  வல்மீகம் என்றால் புற்று. வால்மீகி என்றால் புற்றிலிருந்து பிறந்தவர் என்று அர்த்தம். கடும்தவம் புரிந்த அவரைப் புற்று மூடிக்கொள்ள வருணன் மழை பெய்து புற்றைக் கரைத்தார்.

 நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
 தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
 ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

அவரது தவத்தைக் கண்ட பிரம்மா அவர் முன் தோன்றி இராமாயணத்தைப் பாடச் சொன்னார். வால்மீகி தமது மனக்கண்ணில் தோன்றிய இராமன் கதையை 24000 ஸ்லோகங்களாகப் பாடினார். அதன் பின் அவர் அதை காட்டில் சீதையுடன் வாழும் இராமனின் புத்திரர்களான லவ குசர்களுக்குக் கற்றுக் கொடுத்து இராமன் அஸ்வமேத   யாகம் செய்தபோது அவரது முன்னிலையில் அவர்களைக் கொண்டுப்   பாடச் செய்து முப்பத்திரண்டு நாட்களில் அந்நூலை அரங்கேற்றினார்.

நாரதர் வால்மீகிக்கு கூறிய 100 ஸ்லோகங்களுக்கு  ஸங்க்ஷேப  ராமாயணம் என்று பெயர். இந்த  ஸங்க்ஷேப ராமாயணத்தை தினசரி பாராயணம் செய்வது இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி இராமயணத்தைப் பாடுவதற்கு  சமம்.

இராமயணத்தை இதிகாசம் என்பர்.  இதிகாசம் என்றால் ‘இவ்வாறு நடந்தது’ என்று பொருள். இராமாயண காலம் மகாபாரத காலத்திற்கும் முந்தியது. மலைகளும் நதிகளும் இவ்வுலகில் இருக்கும்வரை இராமாயண  கதையும் இருக்கும்  என்கிறார் வால்மீகி.

மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று இராமாயணம் கற்பிக்கிறது.  ஒரு மகன், சீடன் , கணவன், சகோதரன், வீரன், அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இராமன் ஒரு உத்தம உதாரணமாக திகழ்கிறார். பித்ரு வாக்கிய பரிபாலனம், ஏக பத்தினி விரதம், சகோதரர்களிடையே ஒற்றுமை, சரண் அடைந்தவரைக் காப்பாற்றுதல், பகைவனுக்குக் கருணை காட்டுதல், அரச நீதி, அதர்மத்தை அழித்தல்  போன்ற  குணநலன்களை  மிக அழகாக இராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரமும்  வாழ்ந்து காட்டியுள்ளனர்.

COMMENTS

Elakiya at 03 May 2015

JAI SRI RAM***

1 2 3 5

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

 • கந்தர் அலங்காரம்

  0 377

  அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

  View more
 • Thirunallar

  1 686

  The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

  View more
 • Vallalar Temple,

  0 453

  Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

  View more
 • Cheraman Juma

  0 377

  Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

  View more
 • சங்கராய சங்கராய

  0 375

  சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

  View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN