இராமயணத்தில் சில புதிர்கள்

0 comments
ram-sita-laxman

இராமாயணம் ஒரு சுவையான காவியம். காலம் காலமாக நிலைத்து நிற்கிறது. இருந்தாலும் இந்தக் காவியத்தில் வரும் சில சம்பவங்கள் எனக்குப் புதிராக தோன்றுகின்றன.

1. இராமனுக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்று தசரதன் நிச்சயிக்கிறான். நாட்டில் உள்ள எல்லோரும் இதை அறிந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுகிறார்கள். இதைக் கண்ட கூனி கைகேயியிடம் வந்து அந்தச் செய்தியைக்  கூறுகிறாள். இந்த செய்தியைக் கேட்ட கைகேயி முதலில்  மிகவும் மகிழ்கிறாள். நமக்கு வரும் சந்தேகம் நாட்டில் உள்ள எல்லோரும் அறிந்த ஒரு செய்தியை எப்படி அதே அரண்மனையில் வசிக்கும்  கைகேயி மட்டும் அறியவில்லை?

2.  சீதையை இராவணன் இலங்கைக்கு கவர்ந்து சென்ற விவரத்தை ஜடாயு மூலமாக இராமன் அறிகிறான். சுக்ரீவனும் அதை உறுதி செய்கிறான். இருந்தும் எதற்காக வானரப் படைகளை இருவரும் எல்லா திக்குகளுக்கும் அனுப்பினர்?

3. சீதையை இராவணன் கவர்ந்து சென்ற போது இராமன் ஏன் பரதன் மற்றும் ஜனகரின் உதவியை நாடவில்லை? அவர்களிடம் இந்தச் செய்தியைக் கூறவும் இல்லை.

4.  அனுமன் முதலில் கடலைக் கடந்த போது அவனுக்கு உதவ முன் வந்த சமுத்திர ராஜன் ஏன் பின்னர் இராமனுக்கு உதவ முன் வரவில்லை?

5.  இராமனும் பரசுராமனும்  மகா விஷ்ணுவின் அவதாரங்கள். இருவரும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இராமனிடம் தோற்ற பரசுராமன் திரும்பிச் செல்கிறான். இந்தச் சம்பவத்தின் மூலம் காவியம் என்ன சொல்கிறது?

6. பால காண்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் விஸ்வாமித்திரன் பிறகு காணாமல் போய் விடுகிறார்.

இதற்கு எல்லாம் காரணம் இராமனின் அவதார நோக்கம் என்று முடிவு செய்யலாமா?

LEAVE A RESPONSE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

code

  • கந்தர் அலங்காரம்

    0 424

    அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வா

    View more
  • Thirunallar

    1 774

    The main deity of this temple is Dharbaranyeshwarar (Lord Shiva).  However the major attraction  o

    View more
  • Vallalar Temple,

    0 508

    Vallalar was mystic saint who lived in the 19th century. The saint experienced the Lord and the ligh

    View more
  • Cheraman Juma

    0 427

    Cheraman Juma Masjid is a 7th century mosque located in Kodungalloor,  Trissur district, Kerala. Th

    View more
  • சங்கராய சங்கராய

    0 420

    சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்

    View more

Monis Academy © Copyright 2015, All Rights Reserved

Designed By PREMIERINFO.IN